" alt="" aria-hidden="true" />
இந்த ஏரி தமிழகத்தின் மற்ற ஏரிகளைப் போல அல்லாமல், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான இன்றும் புதுப்பொலிவுடன் விளங்கும் ஒரு அற்புத ஏரி ஆகும். 1011ம் ஆண்டு கட்டத்தொடங்கி, 1037ம் ஆண்டு வெட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும். காவிரி கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த அணைக்கு நீர் வருகிறது.
விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகன் சோழப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். தில்லை நடராசர் கோயிலுக்கு தங்கக் கூரை அமைத்து புகழ்பெற்றவர் அவர். இவருக்கு சோழ சிகா மணி, சூர சிகா மணி, வீர நாராயணன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவர் காலத்தில் கட்டியதே வீராணம் ஏரி என்று தற்போது அழைக்கப்படும் வீர நாராயணம் ஏரி ஆகும்.
வீராணம் ஏரி உருவாக்கம்
பராந்தகன் காலத்தில், வடக்கே ரெட்டை மண்டலத்து ராஷ்டிரக்கூட மன்னர்கள் வலிமை பெற்று வந்தனர். அவர்கள் அவ்வப்போது போரிட்டு பல நாடுகளை வென்றிருந்தனர். இதனால் தென்னாட்டை நோக்கி அவர்கள் படையெடுத்து வரக்கூடும் என்று கணித்திருந்த பராந்தகன் தன் மூத்த மகனாகிய ராஜாதித்தனை ஒரு பெரும்படையுடன் திருமுனைப் பாடி நாட்டுக்கு செல்ல பணித்தார். அது நடுநாடு, தென்னார்க்காடு நாடு என அழைக்கப்பட்டது. இந்த படை வடக்கு நாட்டின் படையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்த காத்திருப்பு காலத்தில் ராஜாதித்யனுக்கு ஒரு யோசனை. இந்த படையில் இருக்கும் லட்சக்கணக்கான வீரர்கள் சும்மா இருந்த நேரத்தில் பயனுள்ளதாக ஏதும் செய்யலாமே என்று எண்ணிய அரசர், பெரும் அணை ஒன்றைக் கட்ட முடிவெடுத்தார். அந்த ஏரிக்கு தன் தந்தையின் பெயரையே வீர நாராயண ஏரி என வைத்தார்.
9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஏரியானது, 16 கிமீ நீளமாகும். 4 கிமீ அகலம் கொண்டது இந்த ஏரி. இது கிண்டியிலிருந்து அண்ணாநகர் வரையிலான நீளம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆரம்ப காலத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டது இந்த ஏரி. ஆனால் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.